பப்ஜி பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… கூகுள் ப்ளே ஸ்டோரில் புது வரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பப்ஜி கேமை உருவாக்கிய தென் கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் நிறுவனம் தற்போது இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” எனும் கேமை அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த கேமை தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் யூசர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஐபோன் பயனாளர்களுக்காக இந்த கேம் மேலும் மேம்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜி கேமை மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்தது. இதனால் இளசுகள் முதல் பெருசுகள் வரை கண்ணீர் வடிக்கச் செய்தனர். சிலர் விபிஎன் மூலம் திருட்டுத்தனமாக பப்ஜி கேமை தொடர்ந்து விளையாடியும் வந்தனர். இதையடுத்து பப்ஜி கேமை மீண்டும் இந்தியாவில் கொண்டு வருவதற்காக கிராப்டன் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை பதில் அளிக்காத நிலையில் தற்போது இந்தியர்களுக்கு என ஜுன் 18 முதல் பிரத்யேகமாக புது ஆன்லைன் கேம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஆண்டிராய்டு மொபைல் யூசர்கள் “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” கேமை கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஒவ்வொரு முறையும் ஓடிபி எண் மூலம் விளையாட முடியும் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் link:http://bit.ly/BATTLEG-OPENBETA-FB எனும் லிங்கிற்கு சென்று இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஒரு நபர் தனது பெயரில் 10 பேட்டில் கிரவுண்ட வீடியோ அக்கவுண்ட் வைத்து கொள்ள முடியும் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதனால் பேட்டில் கேம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தொடர்ந்து பப்ஜி பிரியர்கள் செம குஷி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பப்ஜியைப் போலவே வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த பேட்டில் கேம் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments