கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம்
- IndiaGlitz, [Sunday,March 10 2019]
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல்ஹாசன், தனது கட்சிக்கான சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'பேட்டரி டார்ச்' சின்னத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ள கமல்ஹாசன், வேட்பாளர் தேர்வில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 10, 2019