என்னங்கடா செய்றீங்க.. விஜய் டிவி சீரியலில் குளியல் காட்சி.. விரைவில் சென்சார் வந்துவிடுமோ?

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

ஏற்கனவே இந்தி உட்பட பிற மொழி சீரியல்களில் படுக்கை அறை காட்சிகள், லிப்கிஸ் காட்சிகள் உட்பட குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சீரியல்களிலும் குளியல் காட்சி இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’ஆஹா கல்யாணம்’ என்பதும் இந்த சீரியலில் தான் குளியல் காட்சி இருப்பதை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

அக்ஷயா, விக்ரம் ஸ்ரீ, மௌனிகா உள்பட பலர் நடித்து வரும் ’ஆஹா கல்யாணம்’ சீரியல் தற்போது ஐஸ்வர்யா பொய்யாக கர்ப்பம் என்று சொன்ன காட்சிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவரது பொய் எப்போது வெளிச்சத்துக்கு வரும் என்று பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நாயகன், நாயகி பாத்ரூமில் ஷவரில் குளிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளதை அடுத்து ஒரு பக்கம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஷவரில் இருவரும் சேர்ந்து குளித்தால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்ற ஐடியாவுக்காக இந்த காட்சியை காமெடியாக படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் உலகத்திலேயே பட்டுப்புடவை அணிந்து யாராவது ஷவரில் குளிப்பார்களா? என்று நெட்டிசன்கள் இந்த காட்சியை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற குளியல் காட்சிகள் உட்பட குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் தொலைக்காட்சி தொடரில் இடம் பெற்றால் விரைவில் சென்சார் வந்துவிடும் ஜாக்கிரதை என்றும் ரசிகர்கள் சீரியல் குழுவினர்களுக்கு அன்பான எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 5.. முதல் எபிசோடு படப்பிடிப்பு.. விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தங்க கோவில் முன் தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் முன் தங்கம் போல் தகதகவென ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில்

நீ நேர்ல தாண்டா ஒரு மாதிரி இருக்க.. கேமிராவுல சூப்பரா இருக்க.. பிரதீப் ரங்கநாதன் அடுத்த பட அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்தது.

எனக்கே தெரியாமல் செய்த இந்த விஷயம் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது நடிகை வைஷு விளக்கம்.

நிறைய இடங்களில் நான் நடித்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்.அது மிகவும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது.மனம் வருத்தப்பட்டேன்...

'கோட்' படத்திற்கு சம்மதம்.. 'தலைவர் 171' படத்திற்கு மறுப்பு.. பிரபல நடிகரின் முடிவுக்கு என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' ரோட் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி