பன்றி சூப்பில் கிடந்த வௌவால்!!! அலறி அடித்து கொரோனா டெஸ்ட் எடுத்த குடும்பம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் சென் குடும்பத்தினர் கடந்த ஜுலை 10 ஆம் தேதி உள்ளூரில் உள்ள ஒரு உணவகத்தில் பன்றி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர். உணவகத்தில் இருந்து சூப் வந்ததும் சென்னின் அம்மா அதைத் திறந்து பார்த்து இருக்கிறார். அந்தப் பாக்கெட்டில் கறுப்பாக ஏதோ ஒரு பொருள் இருப்பதைப் பார்த்து வாசனைக்காக சேர்க்கப் பட்டதாக இருக்கும் என நினைத்து அவர் சூப்பை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிமாறியிருக்கிறார். பாதி பாக்கெட் காலியானபோது அவருக்கு சந்தேகம் வலுத்து இருக்கிறது. கறுப்பாக இருப்பது என்ன என்று மீண்டும் அதைக் குச்சியால் தேடித் துலாவிப் பார்த்து இருக்கிறார்.
அப்போதுதான் அது வௌவால் என தெரிய வந்திருக்கிறது. போதாதென்று அந்த வௌவாலுக்கு காது வேறு இருப்பதைப் பார்த்து குடும்பமே மிரண்டு போயிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று வௌவாலில் நோயை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டவை என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். சென் குடும்பம் சாப்பிட சூப்பில் வௌவால் இருந்ததோடு விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி காதுள்ள வௌவாலாக இருந்ததால் மேலும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் உள்ளூர் தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு அவர்களுக்குப் படத்தை அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்கள் வேறு இடத்தில் இருந்து சூப்பை மொத்தமாக ஆர்டர் எடுத்தது தெரிய வந்திருக்கிறது. அவர்களிடம் விசாரித்தபோது நாங்கள் பேக் செய்யும்போது இந்த தவறு நடக்கவில்லை என விளக்கம் அளித்து இருக்கின்றனர். பயந்துபோன சென் குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனையை எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தைக் குறித்து கொரோனா வைரஸ் பரவலால் நிம்மதியாக ஒரு உணவைக்கூட சுவைக்க முடியவில்லை எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout