பாஸ்கர் ஒரு ராஸ்கல்

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதே பொங்கல் தினத்தில் தான் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச்' திரைப்படங்களும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அரவிந்த் சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ், பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்.கே.நகரில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உள்ள 4 தபால் ஓட்டுக்களில்

'வேலைக்காரன்' முதல் நாள் வசூல் விபரம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில்

சென்னையை அடுத்து மதுரையிலும் நம்ம அணி போட்டியிடும்: ஞானவேல்ராஜா

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா,

கருணாநிதி உருவத்தில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்தேன்: மயில்சாமி

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி பூரண ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில்

இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்: பிரகாஷ்ராஜ்

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நேற்று வெளியான 'வேலைக்காரன்' படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.