'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள 'பாஸ்கல் ஒரு ராஸ்கல்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி மே 10ஆம் தேதி திரையிடப்பட்ட நிலையில் திடீரென கடைசி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு அரவிந்தசாமி, அமலாபால் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் மே 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மே 18ஆம் தேதி விஜய் ஆண்டனியின் 'காளி', அதர்வாவின் 'செம போத ஆகாதே' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படங்களுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படமும் இணைந்துள்ளது.

அரவிந்தசாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
 

More News

ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு: இணைந்து செயல்பட வாய்ப்பா?

காவிரி மேலாண்மை குறித்த வழக்கில் நேற்று மத்திய அரசு காவிரி வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதன்பின்னர் இந்த வழக்கு மே 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கீர்த்திசுரேஷின் பாட்டி ஹீரோயினியாக நடிக்கும் படம்

சமீபத்தில் வெளிவந்த 'நடிகையர் திலகம்' படத்தால் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ் என்பது தெரிந்ததே.

இப்படி ஒரு பொண்ணு ரிஜக்ட் செஞ்சா பெருமைதான்: 'செம' டிரைலர் எப்படி?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'செம'.

வாய்ப்பை இழந்தபோதிலும் வாழ்த்துக்கள் கூறிய ஆர்யா!

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த இரும்புத்திரை' படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்: கமல் பட இயக்குனரின் பதிவு

கடந்த வாரம் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்திசுரேஷ் அபாரமாக நடித்திருந்தார்