அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

அரவிந்த்சாமி நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது .இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.ஆனால் தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம்  ஆங்கிலம்  மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.

இதனால் பெரிய  பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின்  பற்றாக்குறையின் காரணமாகவும் , எல்லா  பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை மே மாதம் 11 ஆம்  தேதியன்று வெளியிட  படக்குழு திட்டமிட்டு உள்ளனர் .

More News

கட்சியில் இருந்து விலகியது ஏன்? கமல் முன் தெளிவுபடுத்திய வழக்கறிஞர் ராஜசேகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தி இன்று காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. இந்த செய்தியை வழக்கறிஞர் ராஜசேகரும் மறுக்கவில்லை

எஸ்.வி.சேகர் கருத்து குறித்து கமல் கூறியது என்ன?

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி,.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

நடிகையை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக தான் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை அளித்து வரும் ஸ்ரீரெட்டி டோலிவுட் திரையுலகின் பல பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

விக்ரம் மகனின் 'வர்மா' படப்பிடிப்பு குறித்த தகவல்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'வர்மா' படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிததே

நடுரோட்டில் நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்த மர்ம நபர்கள்: அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகாஷ் சர்மா சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் நடுரோட்டில் திடீரென ஆகாஷ் சர்மாவின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து,