பொங்கல் ரேஸில் இருந்து விலகிய பிரபல நடிகரின் திரைப்படம்

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

வரும் பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்முகபாண்டியனின் 'மதுரவீரன், மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் தற்போது விலகியுள்ளது. இந்த படத்தை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பரதன் பிலிம்ஸ் நிறுவனம்தான் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் உரிமையையும் பெற்றுள்ளதால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தினத்தில் விஷாலின் 'இரும்புத்திரை மற்றும் ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.