'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படங்களில் ஒன்று அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த நிலையில் தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதால் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் இம்மாதம் 27ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னையில் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் தகவலோடு புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்விந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி அட்டகாசமாக நடித்துள்ளாராம். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.