மேலாடை இன்றி சாமிபோல் அலங்கரிக்கப்படும் சிறுமிகள்: மனித உரிமை ஆணையத்தில் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரை அருகே உள்ள வெள்ளலூர் என்ற பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா ஒன்றில் 7 சிறுமிகள் மேலாடை இல்லாமல் சாமி போல் அலங்கரிக்கப்படும் வழக்கத்தை எதிர்த்து மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் உள்பட 60 கிராமங்கள் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெகு சிறப்பாக ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேலாடை இல்லாமல் வெறும் நகைகள் மட்டும் அணிவித்து 15 நாட்கள் சாமி போல் அலங்கரித்து கோவிலில் தங்க வைக்கும் வழக்கம் உள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கமிஷனிடம் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில், 'டிஎஸ்பி சக்கரவர்த்தி, மதுரை தாசில்தார் தமிழ்செல்வி, சமூக நலத்துறை அதிகாரி சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் சோபனா, வெள்ளலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பாபு மற்றும் வெள்ளலூர் வி.ஏ.ஓ. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமிகளின் பெற்றோர்கள் சம்மதத்தின் பேரிலேயே இந்த அலங்காரம் செய்யப்படுவதாகவும், இதுவொரு மத சம்பந்தமான விஷயமாக இருப்பதால் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியவில்லை என்றும் இருப்பினும் சிறுமிகளுக்கு மேலாடை அணிய பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளதாகவும் பெற்றோர்களும் அடுத்த ஆண்டு முதல் மேலாடை அணிய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments