பார் செட்டப்பில் அசத்தல் போட்டோ ஷுட்… இளம் நடிகையின் வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னக்குழி அழகால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் தமிழில் “யுத்தம் செய்” திரைப்படத்தில் அறிமுகமாகி அதற்குப் பின்னர் “மேகா”, “டார்லிங்” போன்ற படங்களின் மூலம் வரவேற்பு பெற்றிருந்தார்.
அதோடு விவசாயம் தொடர்பான நல்ல கதையம்சம் கொண்ட “கத்துக்குட்டி” திரைப்படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பிற்காக எடிசன் விருதையும் பெற்றிருந்தார். பின்பு “வில் அம்பு” இயக்குநர் சேரனுடன் இணைந்து “ராஜாவுக்கு செக்” போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இவையெல்லாம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் சமீபத்தில் வெளியான “சக்ரா” படத்திலும் இவர் உயர் அதிகாரியாக இடம் பெற்றிருந்தார். ஆனால் சக்ராவும் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல பலனைக்கொடுக்க வில்லை.
இந்நிலையில் “கட்டில்” என்ற புதிய திரைப்படத்தில் இவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அவர் தற்போது பார் செட்டப்பில் உள்ள ஒரு இடத்தில் போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments