பானுப்ரியாவின் முன்னாள் கணவர் அமெரிக்காவில் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் நாயகியாக நடித்தவர் நடிகை பானுப்ரியா. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2003ஆம் அபிநயா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பானுப்ரியா, கலிபோர்னியாவில் இருந்து சென்னை திரும்பினார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சென்னையிலேயே மகளுடன் செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆதர்ஷ், கடந்த 20ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com