ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது என்றும், அப்படியே நடந்தாலும் சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால் இந்திய அளவில் காவிரி பிரச்சனை தெரியவரும் என்றும், அதுவும் முடியாவிட்டால் போட்டியை பார்க்க செல்லும் இளைஞர்கள் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து சென்று நம்முடைய உணர்வை வெளிப்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் நாளை கருப்பு உடையுடனும், காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பதாகைகளுடன் செல்ல இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் சற்றுமுன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் மைதானத்திற்குள் செல்லும்முன் பார்வையாளர்கள் சோதனை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தடையை மீறி தமிழ் உணர்வை வெளிப்படுத்த இளைஞர்கள் முயற்சிப்பார்கள் என்றே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout