ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது என்றும், அப்படியே நடந்தாலும் சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால் இந்திய அளவில் காவிரி பிரச்சனை தெரியவரும் என்றும், அதுவும் முடியாவிட்டால் போட்டியை பார்க்க செல்லும் இளைஞர்கள் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து சென்று நம்முடைய உணர்வை வெளிப்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் நாளை கருப்பு உடையுடனும், காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பதாகைகளுடன் செல்ல இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் சற்றுமுன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் மைதானத்திற்குள் செல்லும்முன் பார்வையாளர்கள் சோதனை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தடையை மீறி தமிழ் உணர்வை வெளிப்படுத்த இளைஞர்கள் முயற்சிப்பார்கள் என்றே கருதப்படுகிறது.

More News

ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்

சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம்

காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்டது.

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.