ஏடிஎம்இல் பணம் எடுக்க 6 மணி நேரம் இடைவெளி: வங்கியாளர் குழு பரிந்துரை
- IndiaGlitz, [Wednesday,August 28 2019]
போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க டெல்லி வங்கியாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
நள்ளிரவு முதல் அதிகாலை முதல் அதிக ஏடிஎம் மோசடி நடப்பதால் நள்ளிரவில் மட்டும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் நள்ளிரவில் இனிமேல் ஒருமுறை மட்டுமே ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஒவ்வொரு முறை ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கும்போது ஓடிபி என்ற ஒருமுறை பாஸ்வேடு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்யவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி இதனை ஒருசில ஏடிஎம்களில் மட்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இடைவெளி விட்டு பணம் எடுப்பது, ஒடிபி மூலம் பணம் எடுப்பது ஆகிய இரண்டையும் அமல்படுத்தினால் ஏடிஎம் மோசடி பெருமளவு குறையும் என்பதே இந்த குழுவின் பரிந்துரையாக இருப்பதால் விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது