கொரோனா எதிரொலி: வங்கி செயல்படும் நேரம் திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Monday,March 23 2020]
கொரோனா வைரஸ் எதிரொலியாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பலர் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஒருசில அலுவலகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வெளியே வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதன் அடுத்தகட்டமாக இந்தியா முழுவதும் வங்கிகள் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தினமும் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும் ஒருசில வங்கிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மணி நேரத்திலும் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிமாற்றம் செய்தல், அரசு சம்பந்தமான பரிமாற்றம் செய்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும், நகை கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களும் மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.