வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போய்விட்டதா? அப்போ இந்தத் தகவல் உங்களுக்குத்தான்…

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு விட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்? சம்பந்தப்பட்ட வங்கி அதைத் திருப்பி கொடுக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் தேசிய நுகர்வோர் ஆணையம் விசாரணை செய்த ஒரு வழக்கில் ஹேக்கர்கள் திருடிய பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியே அந்தப் பெண்ணுக்கு திருப்பி கொடுத்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து ஜெஸ்னா ஜோஸ் எனும் பெண் கிரெடிட் கார்டை வாங்கி இருக்கிறார். அந்த கார்டில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் 29 முறை சுமார் ரூ.3 லட்சத்திற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த பரிவர்த்தனைகளை அந்தப் பெண் செய்யவில்லை என்றும் தனக்கு தெரியாமல் யாரோ ஹேக்கர்கள் செய்துவிட்டர்கள் என்றும் புகார் அளித்து உள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு வங்கி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தபட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. அதற்கு பதில் அளித்த வங்கி அதிகாரிகள் கிரெடிட் கார்டு தொலைந்து போய்விட்டதற்கான ஆதாரம் எதையும் அந்தப் பெண் எங்களிடம் கொடுக்கவில்லை. அதனால் அந்தப் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு ஏற்கமுடியாது எனக் கூறினர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ஹேக்கர்கள், ஹேக்கர்கள் அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டை மட்டும் திருடவில்லை. உங்கள் வங்கியின் அமைப்பை மோசடி செய்தே பணத்தை திருடி இருக்கின்றனர்.

எனவே அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் திருட்டு போன ரூ.3 லட்சத்தோடு சேர்ந்து கடந்த 12 வருடமாக இதே மன உளைச்சலோடு இருந்த அவருக்கு நட்டத்தொகையாக மேலும் ரூ.80 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஹேக்கர்களோ அல்லது வங்கி மோசடியோ அது எதுவாக இருந்தாலும் பணம் திருட்டு போய்விட்டதற்கான ஆதாரத்தோடு முதலில் புகார் செய்யவேண்டும். அடுத்து புகார் அளித்துவிட்டு வங்கி சொல்லும் விளக்கத்தை கேட்டுக் கொண்டு அப்படியே விட்டு விடக்கூடாது. மோசடி மற்றும் ஹேக்கர்களின் கைவரிசைக்கு வங்கிகளின் சாப்ட்வேர் அமைப்புகளும் ஒரு காரணம்தான். அதனால் அவர்களையும் பொறுப்பாளிகளாக ஆக்க வேண்டும். பணம் திருட்டுப்போனால் அதற்கு நாம் மட்டும் பொறுப்பு அல்ல. நம்முடைய பணத்தை பத்திரமாக வைத்து இருக்க வேண்டிய வங்கிகளும்தான்.

More News

சோம் கேட்ட சரியான கேள்வி: ஒப்புக்கொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை குறி வைத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வருவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இன்று குறை சொல்லும் டாஸ்கில் ஆரியை குறித்தே சக போட்டியாளர்கள் குறை கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி யார் யாருக்கு?? சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அவரசகால பயன்பாடுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது.

நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்… இளம்பெண்ணை துன்புறுத்தியே கொன்ற கும்பல்!!!

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'மாஸ்டருக்கு பின் ரிலீஸாகும் பிரபல நடிகரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

ரஜினியின் அரசியல் முடிவில் திடீர் மாற்றமா? சாமியாரை சந்தித்ததால் திடீர் திருப்பம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்றும் சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்