டெங்கு காய்ச்சலுக்கு பலியான பேங்க் ஆப் அமெரிக்காவின் எம்டி: 

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும், இந்த காய்ச்சலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதும் தெரிந்ததே. இந்த காய்ச்சல் சாதாரண நபர்களை மட்டுமின்றி விவிஐபிக்களையும் தாக்கி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பேங்க் ஆப் அமெரிக்காவின் உலக முதலீடு சந்தை பிரிவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தவரும், பேங்க் ஆப் அமெரிக்காவின் தற்போதைய எம்.டியுமான 34 வயது சஞ்சீவ் ஜா என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சஞ்சீவ் ஜா அவர்களுக்கு கடந்த சில நாட்களாக மும்பை லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் அறியப்பட்ட சஞ்சீவ் ஜா அவர்களின் அம்ரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.