வாங்கிய லோன் 51 லட்சம், கட்டிய தொகை 94 லட்சம், ஆனால் மீதியிருக்கும் கடன் 37 லட்சம்: வங்கி லோன் குறித்த அதிர்ச்சி  தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

டாக்டர் ஒருவர் வீடு வாங்குவதற்காக வங்கியில் ரூ.51 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவர் 2006ஆம் ஆண்டு வாங்கிய இந்த கடனில் கடந்த 14 ஆண்டுகளில் 94 லட்சம் கடனை திருப்பி கட்டியுள்ளார். ஆனால் தற்போது அவருடைய கடன் வெறும் 14 லட்சம் தான் அடைந்துள்ளதாகவும் மீதி 37 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் விசாரித்தபோது அவருக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

51 லட்சம் ரூபாய் கடனுக்கு அவர் ஒவ்வொரு மாதமும் 14% வட்டி கட்டியதால் அவர் கட்டிய 94 லட்சத்தில் 80 லட்ச ரூபாய் வட்டியாகவே சென்றுள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே ரிசர்வ் வங்கி 14% வட்டியை 8%க்கும் குறைவாக குறைத்தபோதிலும் வங்கி அதிகாரிகள் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காததால், ஒரே ஒரு விண்ணப்பத்தில் தனது வட்டியை குறைக்கும்படி கடன் வாங்கியவர் வழங்காத்தால் அவர் இத்தனை ஆண்டுகாலம் அதிக வட்டியை கட்டியுள்ளார்.

வட்டி சதவிகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்தால் வாடிக்கையாளர்களிடம் தகவல் அளிக்காமலே வட்டி சதவிகிதத்தை ஏற்றிக்கொள்ளும் வங்கிகள், அதே ரிசர்வ் வங்கி வட்டி சதவிகிதத்தை குறைத்தால் விண்ணப்பம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதிகவட்டியை வாடிக்கையாளர்களிடம் பல ஆண்டுகளாக பெற்று வருவது பகல் கொள்ளையாகவே பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் அறியாமையை அறுவடை செய்து வங்கிகள் அடிக்கும் இந்த கொள்ளை குறித்த இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது