பெண் வங்கி ஊழியரை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்த கொடூரம்: ஆந்திராவில் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திராவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் உயிரோடு எரித்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் வங்கி ஊழியர் ஒருவர் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற சென்ற பெண் வங்கி ஊழியர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தேடினர். மகள் குறித்து எந்தவித தகவலும் தெரியாததால் தர்மவரம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பெண் வங்கி ஊழியரை போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரம் சாலையோரம் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது
இதனை அடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்த போது எரித்து கொல்லப்பட்டவர் காணாமல் போன தங்கள் மகள் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். பெண் வங்கி ஊழியரை மர்ம கும்பல் ஒன்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அதன் பிறகு எரித்து கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது
இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் ராஜேஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது. பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே கடந்த ஆண்டு தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர்கள் என்கவுண்டரில் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments