திறந்த வேகத்தில் மீண்டும் மூடப்பட்ட தியேட்டர்கள்: தமிழகத்தின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள் வராததால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது என்பதும் இதனை அடுத்து நாட்டின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. தமிழகத்திலும் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரை அரங்குகள் திறந்த நிலையில் திரையரங்குகளில் போதிய பார்வையாளர்கள் வராததால் மீண்டும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பயம் காரணமாக திரையரங்குகளுக்கு செல்வதற்கு பார்வையாளர்கள் பயப்படுகிறார்கள் என்றும் ஓடிடி பிளாட்பாரத்தில் அதிக அளவில் புதிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்ப்பதே பாதுகாப்பானது என்று பொதுமக்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது

இதுகுறித்து பெங்களூரு திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறியபோது, ‘எங்களுடைய தியேட்டரில் 1200 பார்வையாளர்கள் படம் பார்க்கும் வசதி உள்ளது. அரசு நிபந்தனையின்படி 600 பேர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் 25 முதல் 30 பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க வருகின்றனர். நிர்வாக செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் மீண்டும் தியேட்டரை மூட முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.

மேலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாததாலும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் நிலையில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவராவிட்டால் பெங்களூர் நிலைமைதான் தமிழகத்துக்கும் ஏற்படும் என்று கூறப்படுவதால், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி!

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 100 கிலோவுக்கு மேல் உடல் எடை இருந்ததால்

அமெரிக்காவின் முதல் Powerpuff Girl… துணை அதிபரை வாழ்த்தி மகிழும் கார்ட்டூன நெட்வொர்க்!!!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வார நாமினேஷனில் இத்தனை பேரா? வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த வாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டவர்கள் நாமினேஷன் சிக்குவார்கள் என்பதும் தெரிந்ததே 

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது: பெரும் பரபரப்பு 

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இதே வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும்

துப்பாக்கியை வைத்து செல்பி: தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!

கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் செல்பி மோகம் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதும் அபாயகரமான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிர்களை பல இளைஞர்கள் இழந்துள்ளனர்