அம்மா, தம்பியை கத்தியால் குத்திவிட்டு காதலனுடன் டூர் சென்ற இளம்பெண்!

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாயையும் தம்பியையும் கத்தியால் குத்திவிட்டு அந்தமானுக்கு காதலனுடன் டூர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரில் உள்ள அம்ருதா என்ற இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஐந்து நாள் விடுமுறை எடுத்து தாயையும் தம்பியையும் சந்திக்க வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கத்தியை எடுத்து தனது தாயாரை குத்தி கொலை செய்துவிட்டு அதன் பின் தம்பியையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

தம்பி இறந்துவிட்டதாக கருதி உடனடியாக அவர் வீட்டை விட்டு வெளியேறி தெரு முனையில் காத்திருந்த காதலனுடன் பைக்கில் ஏறி சென்று விட்டார். பிறகு அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்ற இருவரும் விமானத்தில் அந்தமானுக்கு சென்று விட்டனர்

கத்திக்குத்தால் படுகாயமடைந்த அமிர்தாவின் தம்பி மயக்கம் தெளிந்து எழுந்து உடனடியாக போலீசுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அம்ருதா தனது காதலனின் பைக்கில் ஏறியதையும் அதன் பின்னர் விமான நிலையம் சென்றதையும் கண்டுபிடித்தனர்

இந்த நிலையில் உடனடியாக போலீசார் அந்தமான் சென்று அங்கு லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த அம்ருதாவையும் அவரது காதலரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்மாவைவும் தம்பியையும் கொலை செய்து விட்டு காதலனுடன் 5 நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார்

குடும்பத்தினர்களை கொலை செய்துவிட்டு தற்கொலை முடிவு எடுக்க காரணம் மறைந்துபோன அப்பா விட்டு சென்ற கடனே என்று அவர் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அம்ருதா சொன்னதை போலீசார் நம்ப தயாராக இல்லை. இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்