பள்ளி மாணவ, மாணவிகளின் பைகளில் ஆணுறை கருத்தடை மாத்திரைகள்: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

  • IndiaGlitz, [Wednesday,November 30 2022]

பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக பையில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளில் செல்போன் இருக்கிறதா என்பதை சோதனை செய்யுமாறு கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் திடீரென பெங்களூர் நகரில் உள்ள ஒரு சில பள்ளிகளில் சோதனை செய்தனர். அப்போது எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகளில் ஆணுறைகள், மாணவிகளின் புத்தகப்பைகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பல மாணவர்களின் புத்தகப் பையில் சிகரெட் உள்பட போதைப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறையின் உத்தரவின் பெயரில் செல்போன் இருக்கிறதா என சோதனை நடத்தியபோது ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், சிகரெட் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் வழங்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

'டிமாண்டி காலனி 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி, இசையமைப்பாளர் யார்?

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமாண்டி காலனி' என்ற திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வெறும் 2 கோடி ரூபாய்

சிவாவின் 'காசேதான் கடவுளடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது

'கோல்டு' படத்தை அடுத்து நயன்தாராவின் அடுத்த படம்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான 'கோல்டு' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

 ஹனிமூன் எங்கே? திருமணத்திற்கு பின் மஞ்சிமாவின் முதல் பேட்டி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின் மஞ்சிமா மோகன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஹனிமூன்

காஜல் அகர்வாலுக்காக பாட்டு பாடிய 7 இசையமைப்பாளர்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த 'கோஸ்டி'  என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 7 இசையமைப்பாளர்கள் பாடி உள்ளனர் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.