ரஜினி வீட்டின் முன் கதறியழுத ரசிகை: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று அதிகாலை முதலே சூப்பர்ஸ்டார் ரஜினியை பார்ப்பதற்காக அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவர் தனது வீட்டின் முன் வந்து ரசிகர்களுக்கு கையசைப்பார் என்பது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றும் அவர் வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினிகாந்த் இல்லை என்று அவரது தரப்பினர் கூறியும் ரஜினியை பார்க்காமல் செல்லமாட்டேன் என்று பலர் இன்னும் அவரது வீட்டின் முன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினியின் வீட்டுமுன் பெங்களூரு ரசிகை ஒருவர் அவரை பார்க்க வேண்டும் என்று கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக பெங்களூரில் எழுந்து வந்து இருக்கிறேன். தயவுசெய்து நீங்கள் வெளியே வாருங்கள் சூப்பர் ஸ்டார்’ என்று அந்தப் பெண் அழுது கொண்டே கூறும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை போயஸ்கார்டன் ரஜினி வீடு முன்பு பெங்களூர் ரசிகை..@rmmoffice @rajinikanth @RIAZtheboss pic.twitter.com/5YL73pBDa5
— meenakshisundaram (@meenakshinews) December 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com