காண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

பெங்களூரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் தன்னிடம் வந்த கஷ்டமர் ஒருவரிடம் காண்டம் அணிய சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கஸ்டமர் அந்த பாலியல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த 48 வயதான முகுந்தன் என்பவர் பாலியல் தொழிலாளியை சமீபத்தில் அணுகியுள்ளார். ரூபாய் 2500 பேரம் பேசி இருவரும் சம்மதித்துள்ளனர். இந்த நிலையில் காண்டம் எடுத்துக் கொடுத்த பாலியல் தொழிலாளி அதை அணிந்து கொள்ளுமாறு முகுந்தனிடம் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் தான் காண்டம் அணிய முடியாது என்று முகுந்தன் அடம்பிடித்துள்ளார் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு முகுந்தன் கேட்டுள்ளார் ஆனால் பாலியல் தொழிலாளி அதற்கு மறுக்கவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன் பாலியல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கொலையாளி முகுந்தன் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.