நடிகை ஸ்ருதி புகார் எதிரொலி: அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

மீடூ குற்றச்சாட்டு குறித்த விவகாரம் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ஆக்சன் கிங் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். இதனையடுத்து கர்நாடக பிலிம் சேம்பர் இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து ஸ்ருதி பெங்களூரு காவல்துறையில் புகார் செய்தார். இதற்கு பதிலடியாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு அர்ஜூன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய பீனல் கோட் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

'விஸ்மயா' படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்து அர்ஜூனை பெங்களூரு போலீசார் விசாரணை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம்

தீபாவளிக்கு களமிறங்குகிறது 'தல' அஜித் டீம்

தல அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா என்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட டீம் சமீபத்தில் உலக அளவில் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள்