திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா? கடத்தல்காரர்கள் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரூபாய் 8 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமிங்கலத்தின் வாந்தி என்று கூறப்படும் அம்பர்க்ரீஸ் என்று கூறப்படும் பொருளை மிதக்கும் தங்கம் என்று கூறுவதுண்டு. தங்கத்தை போல மதிப்புள்ள பொருள் என்பதால் இதனை அவ்வாறு அழைப்பதுண்டு.
இந்த நிலையில் ரூபாய் 8 கோடி மதிப்புள்ள அம்பர்க்ரீஸ் பொருளை பெங்களூரில் போலீசார் கைப்பற்றியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பொருளை கடத்திய நால்வரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் 6.7 கிலோகிராம் அம்பர்க்ரீஸ் என்ற பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திமிங்கலத்தில் வெளிவரும் இந்த அம்பர்க்ரீஸ் சென்ற பொருள் உயர்ரக வாசனை பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படும் பொருட்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விலை மதிப்புள்ள இந்த அம்பர்க்ரீஸ் பொருளை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
It is highly prized as a fixative and ingredient in fine perfumes.
— Kamal Pant, IPS (@CPBlr) June 9, 2021
The 4 accused are in custody and legal action has been taken under different sections of The Wild Life (Protection) Act, 1972 and u/S 420 of IPC. (2/2)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments