கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குளியலறையில் விழுந்து மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது என்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்து பலியாகியுள்ளதாகவும் இறப்புக்கு பின் செய்த சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் உள்ள ஃவைட்பீல்ட் என்ற காவல் நிலையத்தைச் சேர்ந்த 55 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டர் அவருடைய இல்லத்தில் குளியல் அறையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த சப் இன்ஸ்பெக்டரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து உள்ளார் என்பதும் இறப்புக்கு பின்னரே அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரஜினியை அடுத்து கமல் ஆறுதல்: ஜெயராஜின் மனைவி, மகளிடம் தொலைபேசியில் பேசினார்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சாத்தான்குளம் விவகாரம்: ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறை

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது என்று கூறலாம்.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: 4வது எம்.எல்.ஏ என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின்

'சிங்கம்' சீரீஸ் படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் வீட்டிற்கு கூட செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் கொரோனா வைரசிடம் இருந்து

ரூ.36 ஆயிரம் கரெண்ட் பில்: தனுஷ் நாயகியும் குற்றச்சாட்டு

கரண்ட் தான் ஷாக் அடிக்கும் என்றால் தற்போது கரன்ட் பில்லும் மக்களைக் ஷாக் அடித்து வருவதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம்