வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி? பிரபல நடிகையின் ரெசிப்பி வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், பல நடிகைகள் வித்தியாசமான தங்களுடைய அனுபவங்களையும், கொரோனா குறித்த விழிப்புணர்வையும், வேடிக்கையான வினோத வீடியோக்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் கோலிவுட் திரையுலகை கலக்கிய நடிகை ரம்யா பாண்டியன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி? என்பது குறித்த ரெசிபி குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கோதுமை, வாழைப்பழம், தேங்காய், ஏலக்காய் பவுடர், முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு அவர் வாழைப்பழ பணியார மாவு செய்வது குறித்து அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவிற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்து இன்று எத்தனை பேர் தங்கள் வீடுகளில் வாழைப்பழ பணியாரத்தை செய்ய போகிறார்களோ தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments