தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை...! மீறினால் கடும் நடவடிக்கை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மே-2 வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,தேர்தல் முடிவுகள் வரும் மே-2- ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடந்துவந்த நிலையில், ஒரு கட்டத்தில் மட்டும் வாக்குப்பதிவுகள் நடைபெறாமல் உள்ளது.
கொரோனா குறைந்த வந்த நேரத்தில், தேர்தல் என அரசு அறிவித்திருந்தது. பிரச்சாரங்கள், வாக்குப்பதிவுகள் என மக்கள் கூடியதால் அரசியல் தலைவர்கள் உட்பட, பொதுமக்கள் ஏராளமானோருக்கும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியது. குறிப்பாக தேர்தலுக்குப்பின்தான் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாய் தாக்கியுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவியது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் இந்த அளவிற்கு கொரோனா தீவிரமாக பரவ காரணம் தேர்தல் ஆணையம் தான். அரசியல் கட்சியினர் பிரச்சாரத்திற்காக கூட்டம் சேர்த்தபோது, ஆணையம் இதுகுறித்து எச்சரிக்கவில்லை. இதனால் கொரோனாவை பரப்பியதற்காகவும், மக்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்பதாலும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தலாம் என்று கடுமையாக கூறப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர் தினமான மே-1 அன்றும், தேர்தல் முடிவு நாளான 2- ஆம் தேதியும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். வாக்கு எண்ணிக்கையன்று, கொரோனா தடுப்பு விதிகளை மீறினால், வாக்கு எண்ணிக்கை தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகளின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். கொரோனா தீவிரமாக பரவியபோதே தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்குகள் வந்த வண்ணம் இருந்தது, ஆனால் அப்போது பரிசீலனை செய்யமால், தற்போது உயர்நீதிமன்றம் இப்படி கூற காரணம் என்ன..? என பலரும் கேள்வி எழுப்பு வருகிறார்கள்.
கொண்டாட்டங்களுக்கு தடை:
மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணைக்கையின் போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை என தேர்தல் ஆணையம் சார்பாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது," மே -2-ஆம் தேதியில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளதால், குறிப்பிட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சியினர் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தல், உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments