close
Choose your channels

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய், அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில் படமான 'பலூன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சினிஷ், 'பலூன்' படம் வெற்றிதான் ஆனால், எனக்கு அதில் மகிழ்ச்சியில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை. அனுபவம் இல்லாத, விருப்பமில்லாமல் பணியாற்றும் ஒருசிலரால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஒருவகையில் நஷ்டம்தான். இந்த நஷ்டத்திற்கு யாரும் பொறுப்பேற்க வரவில்லை. உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த துறை கைகொடுக்கும். ஒருசிலர் இந்த துறைக்கு அமாவாசை சத்யராஜ் போல் வருகின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் சுயரூபத்தை காட்டுகின்றனர். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தார். ஆனால் யாரும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதுபோன்ற நிகழ்வு இன்னொரு முறை இந்த துறையில் நடக்கக்கூடாது. இந்த அறிக்கை எனது சினிமா வாழ்க்கையை அழித்தால் கூட நான் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் நான் தயாரிப்பாளரின் வலியை உணர்ந்தவன். நான் அனைத்திற்கும் ஆதாரம் வைத்துள்ளேன். தேவைப்பட்டால் அவைகளை சமர்ப்பிக்கவும் தயார். இந்த அறிக்கையை படிப்பவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து, உடனே தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். இவ்வாறு இயக்குனர் சினிஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் மேற்கண்ட டுவீட்டுக்கு அடுத்த டுவீட்டில் இந்த அறிக்கை என்னுடைய அறிக்கை அல்ல. தயாரிப்பாளரின் அறிக்கை. என்னை பொருத்தவரையில் 'பலூன்' ஒரு ஹிட் படம் அல்ல' என்று கூறியுள்ளார். இதனால் இந்த இரண்டு டுவீட்டுக்களையும் படிப்பவர்களுக்கு குழப்பம் தான் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment