கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார்! எச்.ராஜாவை கிண்டல் செய்யும் இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் புரமோஷனுக்காக செலவு செய்தது. ஆனால் அந்த புரமோஷன் செய்யாத பரபரப்பை தமிழக பாஜக தலைவர்கள் ஏற்படுத்தினார்கள். குறிப்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா ஆகிய இருவரை கூறலாம்.

மேலும் விஜய்யை ஜோசப் விஜய் என்று எச்.ராஜா கூறியதற்கு பின்னர் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்கள் பெயரின் முன்னாள் ஜோசப் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' பட இயக்குனர் சினிஷ், தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பலூன்னு ஒரு படம் வச்சிருக்கேன். புரமோஷனுக்கு காசு இல்லை, கொஞ்சம் பாத்து ஏதாச்சும் பண்ணுங்க சார்' என்று எச்.ராஜாவிடம் கிண்டலாக கூறியுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் மயில்சாமி, 'அரசியல்வாதிகள் மெர்சலுக்கு பிரச்சனை செய்தது போல் எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்தால் நல்லது' என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்

More News

மாஸ் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் விஜய்: பிரபல எழுத்தாளர்

ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றி நடை போட்டு வரும் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு அனைத்து  துறைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவதை

இவர்தான் உண்மையான 'மெர்சல்' டாக்டர்

சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி ஒரு டாக்டர் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும்

நெல்லை தீக்குளிப்பு மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் தீக்குளித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

'செம போதை ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' என நான்கு படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகரான அதர்வா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்

விஷாலின் அலுவலகத்தில் நேற்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால் உண்மையில் நேற்று சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது