'AAA படக்குழு பாணியில் குற்றம் சாட்டியுள்ள பலூன் இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் 'AAA' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களை சந்தித்து சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். அதில் முக்கிய குற்றச்சாட்டு சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தார் என்பதுதான்

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'பலூன்' இயக்குனரும் தனது சமூக வலைத்தளத்தில் திடுக்கிடும் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஒருசிலரால் பலூன் படத்தின் பட்ஜெட் அதிகமானதாகவும், இதனால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவானதாகவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவுக்கு வரும்போது அமாவாசை சத்யராஜ் போல் வந்து பின்னர் தங்களது சுயரூபத்தை காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடினமான உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே சினிமா துறை கைகொடுக்கும் என்று கூறிய இயக்குனர் சினிஷ், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பொறுப்பில்லாமல் ஒருசிலர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நபர் தானாகவே முன்வந்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலூன் படத்தின் அதிகப்படியான செலவுக்கு காரணமான அந்த நபர் யார் என்பதை இயக்குனர் விரைவில் அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பலூன் படம் ஹிட் என்று கூறியுள்ள இயக்குனர் சினிஷ், அந்த வெற்றியை தான் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.,

More News

விஷால் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவின் இடையே 'இரும்புத்திரை' படத்தின் டிரைலர் மற்றும் 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு இன்று மீண்டும் சர்ப்ரைஸ்

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கி கல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கருணாநிதியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த சந்திக்கவுளார். இந்த அவருக்கு மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்: டிடிவி தினகரன்

ஆன்மீகம் என்பது தனி மனிதனை ஒழுங்குபடுத்தவே; அரசியலில் பயன்படுத்தினால் அது தவறாகத்தான் முடியும்.