கிராமத்து கதைகளை குத்தகைக்கு எடுத்திருக்கும் சசிகுமார் புது முக இயக்குனர் சோலை பிரகாஷுடன் இணைந்து காமடி படம் எடுக்க முயன்றிருக்கிறார் அது எவ்வளவு பலனளிக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
சசிகுமாரின் தாயான ரோகினி ஒரு போஸ்ட் மாஸ்டர், மாற்றலாகி ஒரு புது கிராமத்துக்கு செல்கின்றனர். அங்கு யாருமில்லாமல் இருக்கும் முதிய தம்பதிகள் கோவை சரளா மற்றும் சங்கிலி முருகனிடம் நட்பாகி, கறிக்கடை நடத்துபவரின் மக்கள் புதுமுகம் தானியா மீது காதலாகிறார். கேபிள் டிவி அதிபர் வளவனுடன் பிரச்சினை ஆக அதை எப்படி சமாளித்து காதலியை கைப்பிடித்தார் என்பதே மீதி கதை.
சசிகுமார் நாம் பார்த்து பழகிய வழக்கமான கதாபாத்திரத்துக்கு சற்று காமடி கலந்து சமாளிக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே சண்டை காட்சியில் தன் பலத்தை காட்டுகிறார். இளம் வயதுடைய கதாநாயகியுடன் காதல் காட்சிகளில்தான் கொஞ்சம் அலுப்பு தட்ட வைக்கிறார். சசிகுமாரின் பலம் போராளி மற்றும் நாடோடிகள் போன்ற படங்கள் தான் என்பதை புரிந்து கொண்டு கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. புது கதாநாயகி தான்யா அந்த கிராமத்து கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார், இறுதியில் இவருக்கு வைத்திருக்கும் திருப்பம் ரசிக்கும்படியாக உள்ளது. இவரை போலவே பிரியா எனும் வேடத்தில் வரும் பெண்ணும் இரண்டு மூன்று இடங்களில் வயிறு குலுக்க சிரிக்க வைக்கும் கதாபாத்திரம். கோவை சரளாவுக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்க பட்டிருக்கிறது. மின்சார அடுப்பு சேல்ஸ் மேனை வைத்து கரி குழம்பு சமைக்க வைக்கும் போதும் சசிகுமாரை ஏமாற்றி நகை நட்டு வாங்கி போட்டுக்கொள்ளும்போதும் கிச்சி கிச்சி மூட்டுகிறார். மற்றபடி அதிகம் கத்தி பேசுவது எரிச்சல் அதே மாதிரி மலடு என்று சசிகுமாரின் நண்பன் சொல்லும்போது அந்த ஓவர் ஆக்ட்டிங் எடுபடவில்லை. சங்கிலி முருகன் மற்றும் வில்லனாக வரும் வளவன் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.
ரவீந்திரநாத குருவின் காமிராவும் பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பும் ஒகே ராகம். டர்புக்க சிவாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன பின்னணியும் ஓகே. ஒரு லோக்கல் சேனல் வீடியோ காமிராமூலம் படத்தை துவங்கி முடித்த விதம், கதாநாயகி மற்றும் வில்லன் மகளுக்கு வாய்த்த ட்விஸ்டுகள் என்று அங்கங்கே புத்திசாலித்தனம் தென்பட்டாலும் புது இயக்குநர் சோலை பிரகாஷின் பலவீனமான திரைக்கதையும் சிரிப்பு பஞ்சமும் பலே என்று சொல்ல முடியாமல் தடுக்கின்றன.
சசிகுமாரின் தீவிர ரசிகர்களை கவரலாம்
Comments