அன்பும், அன்பளிப்பும் தந்த சிம்புவுக்கு நன்றி: பிரபல நடிகர் நெகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதோடு தனக்கு அன்பும் அன்பளிப்பும் தந்த சிம்புவுக்கு நன்றி என பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திரைப்படத்தில் சிம்பு உடன் காமெடி நடிகர் பாலசரவணன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பாலசரவணன் பிறந்தநாளை அடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில் சிம்புவும் கலந்து கொண்டு பாலசரவணனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகர் பாலசரவணன் கூறியதாவது: அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு சிம்பு சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல. மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு @SilambarasanTR_ Brotherக்கு மனமார்ந்த நன்றிகள் பல????????மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் #சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல???????? pic.twitter.com/oIcRA1wUOG
— Bala saravanan actor (@Bala_actor) November 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments