ஆரிக்கு ஆதரவாக பேசிய பாலாஜி: எதிர்ப்பை தொடரும் ரம்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 7 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் சோம் மற்றும் ரியோ 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். அதனை அடுத்து பாலாஜி 30 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்
இந்த நிலையில் தற்போது 8-வது சுற்று நடைபெற்றுள்ளது. இதுதான் அனேகமாக இறுதிச்சுற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கியம் வரும் என்றும், அந்த வாக்கியம் யாருக்கு சரியாக பொருந்தும் என்று சொல்வதுதான் டாஸ்க் என்றும் அறிவிக்கப்படுகிறது
இதில் ரம்யாவுக்கு ’தேசத்தோடு ஒட்டி வாழ்’ என்ற வாக்கியம் வருவதை அடுத்து அவர் இதனை எதிர்பார்த்தபடி ஆரிக்கு சொல்கிறார். இந்த வீட்டில் எட்டு பேர் இருந்தாலும், அதில் ஏழு பேருடன் கருத்து வேறுபாடு அவருக்கு இருக்கிறது என்றும் அப்படி கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களோடு ஒட்டி வாழ்ந்து இருக்கலாம் என்றும் ஆனால் அவர் அதையும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்
இதை அடுத்து பாலாஜிக்கு ‘துறந்து மறந்து வாழ்’ என்ற வாக்கியம் வருகிறது. அதனை அவரும் ஆரிக்கு கொடுக்கிறார். ஆரியின் விளையாட்டு முறை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்தாலும் உடனே அதனை அவர் மறந்துவிடுவார். இன்றைக்கு காலை சண்டை போட்டாலும் மாலையே அவர் உடனே அதை மறந்து என்னுடன் பேசுவார். அதாவது எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை மறந்துவிட்டு அவர் பேசுவார் என்று பாலாஜி அதற்கு விளக்கம் கொடுத்து ஆரிக்கு ஆதரவாக பேசினார்
ஆரியுடன் கிட்டத்தட்ட தினசரி சண்டை போட்ட பாலாஜியே அவருக்கு ஆதரவாக பேசி இருந்தும் ரம்யா தொடர்ந்து ஆரியின் எதிர்ப்பை காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
#Day95 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/yvn8h2XIeL
— Vijay Television (@vijaytelevision) January 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments