கமல் கண்டிப்புக்கு பின்னர் டோட்டலாக மாறிய பாலாஜி

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் நித்யாவும் இடம்பெற்றுள்ளார்கள் என்ற செய்தி வெளிவந்ததுமே இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் செம ஃபைட் நடக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாக இருந்தது. இந்த கணிப்பு கடந்த இரண்டு வாரங்களில் தப்பவில்லை. வெங்காயத்தில் ஆரம்பித்த சண்டை எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் வரை நீடித்து கொண்டே இருந்தது

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கமல், பாலாஜியின் போக்கை கடுமையாக கண்டித்ததுடன் அவருக்கு நீண்ட நேரம் அறிவுரையும் கூறினார். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதோ அல்லது பிரிந்து வாழ்வதோ உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். சேர்ந்து வாழ்ந்தபோது இருந்த மரியாதை பிரியும்போதும் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினார்.

இந்த அறிவுரைக்கு பின்னர் பாலாஜியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது போல் தெரிந்தது. குறிப்பாக இன்றைய புரமோ வீடியோவில் நித்யாவுக்கு ஜூஸ் போட்டு கொடுத்ததோடு அதை ஊட்டியும் விட்டு தன் அன்பை பொழிந்தார் பாலாஜி. போகிற போக்கை பார்க்கும்போது பிரிந்த வந்த தம்பதிகள் இந்த வீட்டை விட்டு போகும்போது இணைந்து செல்வார்கள் போல் தெரிகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்