பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும், மற்றொரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
நடிகர் தாடி பாலாஜிக்கும், அவருடைய மனைவி நித்யாவிற்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. மனைவியை விட்டு பிரிய மனம் இல்லாத தாடி பாலாஜி, நித்யா பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை அறிந்து... அவரும் கலந்து கொண்டு நித்யாவை சமாதானம் செய்ய முயன்றார்.
மேலும், இவர்களுடைய மகள் போஷிகா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்ததால், பாலாஜியுடன் சேர்ந்து வாழ நித்யா ஒப்புக்கொண்டாலும், 100 நாட்களுக்கு பிறகு தான், அவரை ஏற்றுக்கொள்வேன் என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
எனினும் மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாடி பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தனக்கு நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைத்துள்ளதாகவும், வாரம் ஒரு முறை என் அம்மா வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது என தாடி பாலாஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments