பாலாஜி முருகதாஸ்: சொந்த கதை டாஸ்க்கில் அசத்திய ஒரே போட்டியாளர்
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை கூறிக்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் பலருடைய கதைகள் சுவராசியம் இல்லாமல் இருந்த நிலையில் பாலாஜி முருகேசன் கடைசியாக தனது கதையை கூற வந்ததும், முதல் வார்த்தையே ’உங்கள் அனைவரையும் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன்’ என்றும் ’உங்களுக்கெல்லாம் ஒரு பாசமான அப்பா அம்மா இருந்தார்கள் என்றும் ஆனால் எனக்கு அப்பா அம்மா இருந்தும் எந்தவித பயனும் இல்லை’ என்றும் அவர் உருக்கமாக கூறினார்
சிறு வயதில் அப்பா அம்மாவால் பட்ட கஷ்டங்களை உருக்கமாக கூறிய பாலாஜி, பள்ளியில் படிக்கும் போது தனக்கு சாப்பாடு கூட தனது பெற்றோர் கொடுத்துவிட மாட்டார்கள் என்றும் அதனால் மதிய சாப்பாடு நேரத்தில் பாத்ரூம் சென்று ஒளிந்து கொள்வேன் என்றும் பின்னர் டீச்சர் என்னை கண்டுபிடித்து ஏதாவது வாங்கி கொடுப்பார்கள் என்றும் பல முறை பள்ளியில் பட்டினியாக இருந்ததாகவும் அவர் கூறினார். அவருடைய கதையை கேட்டபோது இப்படியும் பெற்றோர் இருப்பார்களா? என்ற சோகம்தான் ஏற்பட்டது
மேலும் அப்பாவும் அம்மாவும் ரெண்டு பேரும் சேர்ந்து குடிப்பார்கள் என்றும் தன்னை யாருமே கவனிக்கவில்லை என்றும் அதன் பின்னர் தானாகவே முயற்சித்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டமும், அதன் பின்னர் மிஸ்டர் இந்தியா பட்டமும் பெற்றதாகவும், அதன் பின்னர் தான் தன்னுடைய வாழ்க்கையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டது என்றும் அவர் உருக்கமாக கூறினார்
மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் பாலாஜி முருகதாசின் கதை தான் உண்மையிலேயே உருக வைக்கும் அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
#Day5 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/UND6cCNlPe
— Vijay Television (@vijaytelevision) October 9, 2020