'என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், தாங்க மாட்டீர்கள்: முதல்வருக்கு டேக் செய்து டுவிட் போட்ட பாலாஜி முருகதாஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்றும் என்னை அரசியலுக்கு இழுக்க நினைத்தால் தாங்க மாட்டீர்கள் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பெற்றார் என்பது தெரிந்ததே. அதேபோல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார்.
இந்த நிலையில் நேற்று பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார்.
அவருடைய இந்த ட்விட்டுக்கு கடும் விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பிறகு மேலும் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் ‘குடியால் என்னை போன்ற பலர் அனாதையாகியுள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள், அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
There are more Orphans in TN like me.
— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023
Who lost their family to alcohol.
Don’t pull me into politics.
You can’t handle .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments