உண்மையான ஆம்பளை இதை செய்ய மாட்டான்: விஷ்மயா வழக்கு குறித்து பாலாஜி முருகதாஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விஷ்மயா வழக்கின் தீர்ப்பு வெளியானது என்பதை பார்த்தோம். இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ’உண்மையான ஆம்பளை அதை செய்ய மாட்டான்’ என்று கூறியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவை சேர்ந்த விஷ்மயா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார் என்பதும், இது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த வழக்கில் விஷ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 12.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்தும் இந்த தீர்ப்பு குறித்தும் கருத்து கூறிய பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், ‘உண்மையான ஒரு ஆண் வரதட்சனை வாங்க மாட்டார் என்றும் அவன் சுயமரியாதை மற்றும் சுய வருமானத்தால் வாழ்வார் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு அவர் அறிவுரை கூறிய போது ’உங்களை ஒரு சொத்தாகவோ, பொருளாகவோ நினைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்’ என்று கூறியுள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்த பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
Real Man never asks for DOWRY!
— Balaji Murugadoss (@OfficialBalaji) May 28, 2022
He believes in self-respect and self-earnings!
Dear girls move away from anyone who thinks you as an asset or trophy. pic.twitter.com/bbjS4TyYnU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments