பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டா? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தாலும் காமெடி மற்றும் சென்டிமென்ட் காட்சிகளும் வந்து கொண்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி வித்தியாசமாக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் சுரேஷ் கடைபிடித்த டெக்னிக்கை பாலாஜி தற்போது கடைபிடித்து வருகிறார். தன்னுடைய முகம் அனைத்து புரமோவிலும் இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வதாக தெரிகிறது. இருப்பினும் அவரது விளையாட்டு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பாக தனது அம்மா அப்பா குறித்து ஆரம்பத்தில் அவர் கூறியதும் அதன் பின்னர் அவர் மாற்றி கூறியதும் அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து உள்ளது

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் பாலாஜி சிக்கி உள்ளதாக தெரிகிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டபோது சனம் ஷெட்டியை அடிக்க பாய்ந்தார் என்பதும் மரியாதை இல்லாமல் பேசினார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து ஒரு பெண்ணிடம் அதுவும் தன்னை விட வயது அதிகமான ஒரு பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன

ஏற்கனவே இரண்டாவது சிசனில் மகத், மூன்றாவது சீஸனில் சரவணன் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாலாஜிக்கும் ரெட்கார்டு கொடுக்கப்படுமா? என்ற தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்படுகிறது

பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற அனைத்து பெண்களிடமும் பாலாஜி மரியாதையாகத்தான் நடந்து வருகிறார் என்பதும் சனம்ஷெட்டி பாலாஜியை மட்டுமின்றி போட்டியாளர்கள் பலரின் கோபத்தை தூண்டி வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே அதிகமாக பேசி வருவதாகவும், அந்த வகையில் பாலாஜியையும் அவர் தூண்டிவிட, அவர் உணர்ச்சி வசப்பட்டு ஒரு சில வார்த்தைகளை விட்டு விட்டார் என்றும் பாலாஜி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கடைசி வாரம் வரை செல்லக்கூடிய, கண்டெண்ட் கொடுக்கக்கூடிய ஒரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து அனுப்ப சேனல் நிர்வாகமும் விருப்பப்படாது என்றே கூறப்படுகிறது