மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட பாலாஜி முருகதாஸ்.. கேப்ஷனில் ஒரு டிவிஸ்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் நேற்று தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும் இந்த திருமண அறிவிப்பை வெளியிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் என்று பதிவு செய்து மணப்பெண்ணை காட்டாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து நேற்று ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்பதற்கான பதிவா? அல்லது அவர் நடித்து வரும் திரைப்படங்களில் வரும் காட்சிகளில் ஒன்றா? என கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் பதிவு செய்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பாலாஜி முருகதாஸ் மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவது போன்ற காட்சி உள்ளதை அடுத்து மணப்பெண்ணுடம் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தாலி கட்டும் முன் மணப்பெண் சிரிக்கும் காட்சியும் உள்ளது.

இதனை அடுத்து இந்த பதிவின் கேப்ஷனில் ’உங்களுடைய வேண்டுகோளின் படி இந்த புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன், இதுதான் என்னுடைய திருமண வீடியோ, ஆனால் அதே நேரத்தில் இது ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ, ஏப்ரல் 1’ என்று கூறி அவர் இது உண்மையான திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.