பிக்பாஸ் ரன்னர் பட்டம் வென்ற பாலாஜியின் முதல் வீடியோ!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியும் பாலாஜியும் வெவ்வேறு கோணங்களில் விளையாடினார்கள் என்பதும் ஆரி அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி கோபப்படாமல் மற்றவர்களின் குறைகளை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தி விளையாடினார். ஆனால் பாலாஜி தனது கோபத்தை முற்றிலுமாக வெளிப்படுத்தி அனைவரையும் டார்ச்சர் செய்து சர்ச்சைக்குரியவர் என்ற பெயரெடுத்து விளையாடினார்.

ஆனால் எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாக அடித்துக் கொண்ட இந்த இருவர்தான் வின்னராகவும், ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஆரி உள்பட போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் தங்களது ரசிகர்களுக்கு மெசேஜ்களை கூறி வருகின்றனர்

அந்த வகையில் தற்போது பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: உங்கள் அன்புக்கும் உங்கள் ஓட்டுக்கும், எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. லைவ் வரவேண்டும் என்று பலர் கேட்டனர். ஆனால் என்னால் லைவ் வரமுடியவில்லை. அதனால் இந்த சின்ன வீடியோவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் நான் அன்பு செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். பாலாஜியின் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது