'தல நீங்களும் ஓவியா ஆர்மியா? பிக்பாஸ் பாலாவின் டுவிட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி தொடங்கினார்கள் என்பதும் அதன் பின்னர்தான் அடுத்தடுத்து சீசன்களில் உள்ள போட்டியாளர்களுக்கு ஆர்மிகள் சமூகவலைதளங்களில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி ஓவியா தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியினர் இன்றே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பெற்றவருமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியாவுக்கு தனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ’அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் அக்கா’ என்றும் ’நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்றும் பாலாஜி முருகதாஸ் டுவிட் செய்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டிற்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். ’தல நீங்களும் ஓவியா ஆர்மியா?’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Advance Happy birthday my dear Akka@OviyaaSweetz
— Balaji Murugadoss (@OfficialBalaji) April 28, 2021
Stay happy stay blessed #cdp #Oviya pic.twitter.com/PNnJVhEOdK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments