இயக்குனர் பாலாஜி மோகனின் சஸ்பென்ஸ் தகவல் இதுதான்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'மாரி 2' திரைக்கதையை அவர் எழுதி கொண்டிருப்பதால் இந்த தகவல் 'மாரி 2' குறித்ததாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாலாஜி மோகன் வெப் சீரியல் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 'As I am Suffering from Kadhal' என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த சீரியல் விரைவில் தனியார் வெப் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சீரியலின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாகவும் இயக்குனர் பாலாஜி மோகன் அறிவித்துள்ளார். கதை, திரைக்கதை, தயாரிப்பு மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை பாலாஜி மோகன் ஏற்றுள்ள நிலையில் இந்த வெப் சீரியலுக்கு சதீஷ் ரகுநாதன் என்பவர் இசையமைக்கின்றார். பாலாஜி மோகனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments