காதல் மனைவியை விவாகரத்து செய்தார் பாலாஜி மோகன்

  • IndiaGlitz, [Friday,May 06 2016]

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளது குறித்து பல்வேறு வதந்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். நானும் எனது மனைவி அருணாவும் கருத்துவேறுபாடு காரணமாக மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம், தற்போது இருவருக்கும் சட்டபூர்வமான விவாகரத்து கிடைத்துள்ளதால் இருவரும் அவரவர் பாதையில் செல்ல முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகனும், அருணாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். ஆனால் ஒரே வருடத்தில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி மோகன் விரைவில் தனுஷ் நடிக்கும் 'மாரி 2' படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியின் றெக்கைக்கு பூஜை

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. 'நானும் ரவுடிதான்', 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்' என ஹாட்ரிக்...

விஷாலின் 'மருது' ரிலீஸ் தேதி உறுதியானது

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மதகஜ ராஜா' ரிலீஸ் தேதி மே 13 என கூறப்பட்டு வந்தபோதிலும் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை...

இளையதளபதி ரசிகனின் கதை அதரவெப்போம் - இயக்குனர் ஜான்

விஜய் ரசிகர்களை மையப்படுத்தி 'அதிரவைப்போம்' என்ற படம் தயாராகியுள்ளது என்பதும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது...

ஹாலிவுட் நடிகருடன் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தில் ஸ்ருதிஹாசன் அவரது மகளாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே...

சூர்யாவின் '24'க்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா மூன்று வேடங்களில் நடித்த '24' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது....