பாலாஜிக்கு முழுதாய் சப்போர்ட் செய்த மீராமிதுன்: கொஞ்சநஞ்ச ரசிகர்களையும் குறைக்கும் முயற்சியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் கிட்டத்தட்ட ஆரி தான் என்று ரசிகர்களால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், ‘பாலாஜிதான் ரியல் வின்னர் என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் ஆரிக்கு இருப்பது உண்மையான ரசிகர்கள் கிடையாது என்றும் பேமெண்ட் ரசிகர்கள் மற்றும் கமலஹாசன் செட்டப் செய்தவர்கள் என்றும் ஆரியை வேண்டுமென்றே கமல் புகழ்ந்து பேசி அவர் தான் மக்கள் மத்தியில் ஆரியை விளம்பரப்படுத்துகிறார் என்றும் மீராமிதுன் குற்றம்சாட்டியுள்ளார்
மேலும் இந்த சீசனில் உண்மையாகவே திறமையாக விளையாடுபவர் பாலாஜி மட்டுமே என்றும் பாலாஜி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வேன் என்றும், கடந்த சீசனில் என்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாமல் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். எனக்கு டார்ச்சர் கொடுத்தது போன்றே தற்போது பாலாஜிக்கு டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதையும் மீறி அவர் வின் செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் ஒருவேளை அவர் வின் பண்ணவில்லை என்றாலும் அவர் தான் ரியல் வின்னர் என்றும் மீரா கூறியுள்ளார்.
பாலாஜி உண்மையாகவே அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும் அவர் இந்தியாவின் சூப்பர் மாடல் என்றும் மற்றவர்களை ஒப்பிடும்போது பாலாஜிதான் மிகச் சிறந்தவர் என்றும் மீராமிதுன் கூறியுள்ளார்
பிக்பாஸ் வீட்டில் இப்பொழுதுதான் பாலாஜி கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வருகிறார் என்பதும், ஆரியிடம் ஆலோசனை கேட்டு வெளியே வந்தவுடன் விவசாயம் செய்யப் போவதாகவும் கூறி அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மீராவின் இந்த சர்ச்சை பேச்சு அவரை உண்மையிலேயே பாராட்டவா? அல்லது பாலாஜிக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவையும் குறைக்கும் முயற்சியா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com