நித்யா போலீஸ் புகாருக்கு தாடி பாலாஜி பதில்!
- IndiaGlitz, [Sunday,February 24 2019]
நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களின் அறிவுரையால் மீண்டும் இணைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரில் தாடி பாலாஜி தன்னையும் தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் போலீசார் முன் ஆஜரான தாடி பாலாஜி இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் தனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை என்றும் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டதாக கூறப்படும் ஜனவரி மாதம் தான் சென்னையிலேயே இல்லை என்றும் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தாகவும் தன் மீது நித்யா பொய் புகார் தெரிவித்து உள்ளதாகவும் கூறிய்ள்ளார்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் மாதவரம் போலீஸ் நிலையம் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயார் என்று எழுத்துப்பூர்வமாக தாடி பாலாஜி போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது