மகத்தை காறித்துப்பிய பாலாஜி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,July 05 2018]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், காதல் மன்னன் போல் அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா இருவரிடம் அவர் காட்டும் நெருக்கம் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி அந்த வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கும் பொறாமையை ஏற்படுத்துகிறது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மும்தாஜ், டேனியல், ரித்விகா உள்பட ஒருசிலர் பாத்திரம் சுத்தம் செய்வது குறித்து சண்டை போட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவி வைஷ்ணவி உள்பட ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருபக்கம் காரசாரமாக இந்த சண்டை நடந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் மகத், யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்துவருகிறார். இதனை பார்த்த பாலாஜி, அவர்கள் இருவர் முன் காறித்துப்பி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் பிக்பாஸ்  வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை இன்று இரவு முழு நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்